துாத்துக்குடி: துாத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் கூட்டு திருப்பலிக்கு பின்பு, ஆலயத்தின் முன் உள்ள கொடிக்கம்பத்தில் துாத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கொடியேற்றி வைத்தார்.
ஆலய பங்குதந்தை குமார்ராஜா மற்றும் முக்கிய பங்கு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின்பு திருப்பலி நடந்தது. இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெ ளியில் முககவசம் அணிந்து பங்கேற்றனர். மதியம் ௧௨ மணிக்கு பனிமயஅன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டது. பொன்மகுடத்தில் மாதாவின் அற்புத காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து வழிபட்டனர். ஆகஸ்ட் 5ம்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. ஊரடங்கு விதிகளை பின்பற்றி விழா நடப்பதால் ஆலயத்தில் சப்பரபவனி, தேர்பவனி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.