திருப்புவனம் : கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கி.மு., 200ம் நுாற்றாண்டை சேர்ந்த முத்திரை பதித்த நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஏழு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, கல்உழவு கருவி, சுடுமண் பகடை உள்ளிட்டவை கிடைத்துள்ளன. தற்போது வணிகத்திற்கு சான்றாக, சில்வர் நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி.மு., 200 முதல் 600ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக அறியப்படும் இந்த நாணயம் சதுரமாக உள்ளது. இருபுறமும் நிலவு, சூரியன், விலங்கு உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.வைகை நதி கரை நகரான கீழடியில் வணிகம் நடந்ததற்கு சான்றாக, ஏற்கனவே ரோமானிய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடு கண்டறியப்பட்டது. தற்போது, நாணயம் கிடைத்துள்ளது.