கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட கூட்டுப்பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2021 05:07
சின்னமனுார் : கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி சின்னமனுார் வாலசித்தி விநாயகர் கோயிலில் ஹிந்து முன்னணி சார்பில், யாக கூட்டு பிரார்த்தனை நடந்தது. நகர் செயலாளர் மருதமுத்து தலைமை வகித்தார். ஹிந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா, மாவட்ட செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். ஹிந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் சாரதா, பூங்கொடி ஆகியோர் பிரார்த்தனையை நடத்தினர். கோட்ட செயலாளர் கணேசன் பேசினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் வேல்சிவக்குமார், ரெங்கசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.