கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கமலா நேரு தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
நுாறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் சித்தி விநாயகர், காமாட்சி அம்மன், வீரபக்த ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, கயல்விழி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணியன், துர்க்கையம்மன், நவக்கிரகங்கள் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் வளர்பிறை, தேய்பிறை பிரதோஷம் வழிபாடுகள், ஆடி கிருத்திகை வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ராஜகோபால் சிவாச்சாரியார் வைபவங்களை செய்து வைக்கிறார். வழிபாடுகளை கோவில் தலைவர் வேலு மற்றும் விழாக்குழுவினர் பக்தர்கள் பங்களிப்புடன் செய்து வருகின்றனர்.