பழநி அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2021 09:07
பழநி: பழநியில் அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கிராம கோயில்களான கருப்பண்ணசாமி, சப்த கன்னிமார் கோயில்களில் அதிக அளவில் பக்தர்கள் வழிபாடு செய்ய வந்திருந்தனர். ஆற்றங்கரை ஓரங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர். குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. பெரியநாயகி அம்மன், மாரியம்மன், கிரி வீதியில் வீர துர்க்கை, அழகுநாச்சி, வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயில்கள், புது தாராபுரம் ரோட்டில் உள்ள ரெணகாளியம்மன் கோயில். பெரிய கலைய முத்தூர். ஹை கோர்ட் காளியம்மன் கோயில் உட்பட அனைத்து அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு கூல், பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.