சூலூர்: ஆடி மாத இரண்டாவது வெள்ளியை ஒட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சூலூர் பெரிய மாரியம்மன், அங்காளம்மன், காட்டூர் மாகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடந்தன. இருகூர் மாசாணியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை நடந்தபோது, கிளி ஒன்று அம்மன் மடியில் அம்ர்ந்து கொண்டது. இதைக்கண்ட பக்தர்கள் பரவசத்துடன் அம்மனை வணங்கினர்.