வெள்ளகோவில்: வெள்ளகோவில் அம்மன் கோவில் வீதியில் உள்ள பிற திருமலையம்மன் கோவிலில் பெயர் சூட்டும் விழா சிறப்பாக நடந்தது.
வெள்ளகோவில் பகுதிகளில் வசிக்கும் ( கவுண்டர்கள் ) உள்ளூர் ஆந்தை குலத்தை சார்ந்தவர்கள் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். திருமலையம்மன் கோவிலில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையன்று காலை பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து தங்கள் குடும்ப வாரிசுகள் ஆண், பெண் இருவருக்கும் இரண்டாவதாக சுவாமி பெயரை சூட்டி விழா எடுத்து வருகின்றனர். குழந்தை பிறந்து 3 வது மாதம் நட்சத்திரத்துக்கு ஏற்றவாறு, நியூமராலஜிக் கேற்றவாறு பெயர் வைத்து கூப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் வாரிசு ஆணாக இருந்தால் பிரதி ஆண்டு ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை திருமலையம்மன் கோவிலில் நல்லகுமார், மல்லிகவுணடர் என ( இரண்டாவது பெயர் வைக்க கால அவகாசம் )திருமணத்துக் முன்பு வரை இரண்டாவது பெயர் சூட்டி அழைப்பார்கள். வாரிசு பெண்ணாக இருந்தால் பெண் ( பூப்படைவதற்குள் ) திருமலையாத்தாள், தெய்வானை, வள்ளியாத்தாள் என பெயர் வைத்து அழைப்பார்களாம். தொடர்ந்து தங்கள் முதலில் வைத்த பெயரே தொடருமாம்.