பதிவு செய்த நாள்
31
ஜூலை
2021
02:07
பொள்ளாச்சி : ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் வழங்கி காத்திட வேண்டும், என மனமுருகி, ஆடிவெள்ளியில் பக்தர்கள், அம்மனை வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில்களில் அபிேஷகம், அலங்கார பூஜைகளுடன், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கோவில்களில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வளையல், மஞ்சள், குங்குமம் படைத்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பக்தர்கள், அம்மனுக்கு கூழ் படைந்து வழிபட்டனர். அதன்பின், கூழ் வகைகளை பக்தர்களுக்கு வழங்கினர்.பெண்கள் பலர், கோவில் முன் உள்ள பலிபீடத்தில் உப்பு துாவி, நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.நீண்ட வரிசையில் பக்தர்கள் நிற்க வைக்கப்பட்டு, முகக்கவசம் அணிந்து வருகின்றனரா என கண்காணித்து ஒவ்வொருவராக கோவிலுக்குள் அனுமதித்தனர்.திப்பம்பட்டி மலையாண்டி ஈஸ்வரர் கோவிலில், சந்தனகாப்பு, குங்குமம், வேப்பந்தழை காப்பு, எலுமிச்சம் பழம் கனி படைத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கிணத்துக்கடவுசூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று, அம்மன் சந்தன, விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்ட பெண்களுக்கு பிரசாதமாக, வளையலும், மஞ்சள் கயிறும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கூழ், பொங்கல், அபிேஷகம் மற்றும் பச்சைமாவு பிரசாதம் வழங்கப்பட்டது.ஆனைமலைஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று, அம்மனுக்கு நான்கு கால பூஜை நடந்தது. கணபதிபாளையம் கவுமாரி பத்திரகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
ரமணமுதலிபுதுார் நாகாத்தம்மன் புற்றுக்கண் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் விரதமிருந்து, மனமுருகி அம்மனை வழிபட்டனர்.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காசிவிஸ்வநாதர் சன்னதியில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜையும், அலங்கார வழிபாடும் நடந்தது. உடுமலை உடுமலை மாரியம்மன் கோவிலில், பச்சை பட்டுடுத்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பால், பன்னீர், உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கப்பட்டது.திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், சுவாமி நம்பெருமாள், பத்மாவதி தாயார் தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், மஞ்சள் காப்பு அலங்காரத்தில், ரத்தினாம்பிகை; பிரசன்ன விநாயகர் கோவிலில், விசாலாட்சி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.சீனிவாசா வீதி, உச்சி மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தி, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நெல்லுக்கடை வீதி காமாட்சியம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். கோவில்களில் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர் - நிருபர் குழு -.