அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2021 11:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாபவையொட்டி, உண்ணாமுலையம்மன் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளம் முழங்க, பக்தர்கள் இன்றி நேற்று காலை 6.27 மணிக்கு கொடியேற்றப்பட்டது. உண்ணாமுலையம்மன் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளிய பராசக்தியம்மன் மற்றும் வெள்ளி கசவத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் இன்றி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.