ஆடிக் கிருத்திகை ஆடி பெருக்கு கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2021 03:08
பழநி: பழநி மலைக் கோயில் தரிசனத்திற்கு ஊரடங்கு தளர்வு பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோய்த்தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த முதல்வர் ஸ்டாலின் கலெக்டர், போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய கோயிலாக பழநி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை, ஆடி பெருக்கு நாட்களில் அதிக பக்தர்கள் கூடுவார்கள். எனவே கொரோனா நோய் பரவலை தடுக்க நாளை (ஆக.,2, ) நாளை மறுநாள் (ஆக., 3)ஆகிய இரு தினங்களுக்கு கோயிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாட்களில் கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்கு இரு தினங்களுக்கு பழநி மலைக்கோயிலுக்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.