அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2021 03:08
நிலக்கோட்டை: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8ல் ஆடி அமாவாசை வருகிறது.அந்நாளில் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் திருவிழா விமரிசையாக நடைபெறும். பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து நீராடி சிறப்பு அபிஷேகங்கள் செய்வார்கள். கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க ஆடி அமாவாசை திருவிழா நடைபெற அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே அந்நாளில் கோயில் வளாகத்தில் தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி கோயில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். மேற்படி பூஜைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.