பதிவு செய்த நாள்
02
ஆக
2021
05:08
சேலம்: ஆடிப்பெருக்கு திருவிழாவில், கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் நிலவும் கொரோனா சூழலால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், ஆடிப்பெருக்கு திருவிழா நடக்கும் நீர்நிலைகள் அருகே உள்ள அம்மன், முனியப்பன் கோவிலில், பொங்கல் வைபவம், நேர்த்திக்கடன், சிறப்பு வழிபாடு, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை, பிரதோஷம், பவுர்ணமி வழிபாடு, தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை வழிபாடுக்கு, கோவில், அதன் வளாக சுற்றுப்புறங்களுக்கு வரவும், கூடுவதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.