பதிவு செய்த நாள்
02
ஆக
2021
05:08
ஈரோடு: கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கையால் வரும், 3ல் ஆடிப்பெருக்கு விழா நாளில், நீர் நிலைகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடுவதையும் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், காளிங்கராயன் அணைக்கட்டு, காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர், பண்ணாரி அம்மன் கோவில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில்களில், மக்கள் வழிபட அனுமதி இல்லை. மேலும், காரணம்பாளையம் அணை, கொடிவேரி தடுப்பணை, பவானிசாகர் அணை போன்ற பகுதி, காவிரி ஆற்றங்கரை பகுதிகளில், புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.