சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடிப்பெருக்கு, 189 ஆவது குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2021 03:08
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் குருபூஜை மற்றும் ஆடிப்பெருக்கு அன்னதானம் ஒரே நாளில் நடந்தது.
இப்பகுதியில் மக்களோடு வாழ்ந்து அருள்பாலித்த சித்தர் முத்துவடுகநாதர் 189 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று ஜீவ சமாதி அடைந்தார். ஆண்டுதோறும் அன்றைய தினம் குருபூஜை விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடிப்பெருக்கு அன்று அன்னதான விழாவும் நடத்தப்படுகிறது. நேற்று இந்த இரண்டு விழாவும் ஒரே நாளில் வந்ததை தொடர்ந்து இருதரப்பும் தனித்தனியாக அன்னதானம் செய்து வழிபாடு நடத்தினர். சித்தரின் வாரிசுதாரர்கள் விழாவில் பங்கேற்றனர். காலை 7:00 மணிக்கு சித்தருக்கு 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 10:00 மணிக்கு அன்னதானத்துக்காக சமைத்து குவித்து வைக்கப்பட்ட சாத குவியல்களுக்கு பூஜை செய்யப்பட்டு அன்னதானம் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலித்தார். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அன்னதானத்தை பெற்றுச்சென்றனர் அனுமதிக்கப்பட்டனர். தமிழக அரசின் தடை காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் வெளியில் நின்றே சாமியை வழிபட அனுமதிக்கப்பட்டனர்.