பதிவு செய்த நாள்
04
ஆக
2021
09:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல உற்ஸவ திருவிழா கொடியேற்றம் நாளை (ஆக.,5) காலை 10:30 மணி முதல் 11:14 மணிக்குள் நடக்கிறது.திருவிழாவில் தினமும் சிவபெருமானின் திருவிளையாடல் லீலை உற்ஸவம் நடக்கிறது.
ஆக.,11ல் கருங்குருவிக்கு உபதேசம், 12ல் நாரைக்கு மோட்சம் அருளியது, 13ல் மாணிக்கம் விற்ற லீலை, 14ல் பொற்கிழி வழங்கிய லீலை, 15ல் உலவாக்கோட்டை அருளியது, 16ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு திருவிளையாடல் நடக்கிறது. திருவிழாவின் முக்கியநிகழ்ச்சியான சுவாமி பட்டாபிேஷகம் ஆக.,17 இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது.அன்று காலை வளையல் விற்ற லீலையும்,ஆக.,18 ல் நரியை பரியாக்கிய லீலை, 19ல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 20ல் விறகு விற்ற லீலை நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுவாமி புறப்பாடு கிடையாது. இவை அனைத்தும் கோயில் வளாகத்தில் நடக்கும் என கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.