கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆடிப்பெருக்கு விழா விமர்சியாக நடந்தது. இங்குள்ள பெரிய மாரியம்மன், காளியம்மன், குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், பண்ணைக்காடு மயான காளியம்மன், தாண்டிக்குடி பாலமுருகன், கானல்காடு, ஊத்து பூதநாச்சியம்மன் மற்றும் கிராமங்களில் உள்ள குலதெய்வ வழிபாடுகள் செய்யப்பட்டன. சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பொங்கல் வைத்தல் ஆகியன நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.