பதிவு செய்த நாள்
05
ஆக
2021
09:08
புதுடில்லி :அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும என, கோவிலை கட்டும், ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.மத்திய அரசு அமைத்த, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, கோவிலை கட்டி வருகிறது.
இந்நிலையில், அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மூன்று மாடிகள், ஐந்து மாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிந்து, 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசினத்துக்காக கோவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும் 2025ம் ஆண்டுக்குள் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.