பதிவு செய்த நாள்
05
ஆக
2021
10:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 8 வரை சுவாமி தரிசனம் செய்ய தடை நீட்டித்து, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு விழாக்களால், கொரோனா தொற்று பரவல் அதிகமாகக் கூடாது என்ற காரணத்தால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 1 முதல், 3 வரை மூன்று நாட்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும், 8 வரை தடை நீட்டிக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டத்திலுள்ள, முக்கிய கோவில்களிலும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கம்போல், அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ நான்காம் நாள் காலை உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தியம்மன் ஐந்தாம் பிரகாரத்தை வலம் வந்தனர்.