பதிவு செய்த நாள்
05
ஆக
2021
03:08
அவிநாசி: அவிநாசி வாழ் பக்தர்கள் மற்றும் திருக்கோயில் சிவாச்சாரியார்கள், சன்னை மிராசுகள் மற்றும் திருக்கோயில் மிராசு கிராம மக்கள் சார்பில், சரவணம்பட்டி, சிரவணபுரம் கௌமார மடாலய, சிரவை ஆதீனம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகளிடம் வழங்கிய மனு;
கடந்த, 1968ம் முதல் சிரவை ஆதீனம் தவதிரு. சுந்தரசுவாமிகள் தலைமையில், பல்வேறு திருப்பணிகள் அவிநாசி அருள்மிகு கருணாம்பிகை உடனுறை அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில், உபகோயில்களான அருள்மிகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஆகாசராயர் திருக்கோயில் ஆகியன, பிரம்மாண்டமான முறையில் திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டு வந்தது. தற்சமயம், திருக்குட நன்னீராட்டு விழா நடந்து, 13 ஆண்டுகள் கடந்து விட்டதால். தங்கள் தலைமையில், அறநெறிகளின்படி, பக்தர்களின் பங்களிப்போடு திருப்பணிகள் மேற்கொண்டு, திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை சிறப்பாக நடத்தி தர வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.