பொள்ளாச்சி; பொள்ளாச்சி, தொண்டாமுத்துாரில், கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரவையின், கோவை தெற்கு மாவட்ட அமைப்பாளர் கோவிந்த்ஜி தலைமை வகித்தார்.பூஜாரிகளுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒன்றிய அமைப்பாளர் தண்டபாணி நன்றி கூறினார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கோவில்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட பூஜாரிகளுக்கு ஓய்வூதியம், அனைத்து பூஜாரிகளுக்கும் கொரோனா உதவித்தொகை, உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும்.கிராம கோவில் பூஜாரிகள் நலவாரியத்தில், புதிதாக பதிவு செய்ய பழைய பதிவு முறையில் எளிமையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும்.கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.