பதிவு செய்த நாள்
06
ஆக
2021
04:08
ஈரோடு: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆடி அமாவாசையான நாளை மறுதினம், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், அணைக்கட்டு, ஆறுகளில் நீராடவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன், தலையநல்லூர் பொன்காளியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், கோபி பச்சைமலை, பவளமலை கோவில், நஞ்சை காளமங்கலம் மத்யபுரீஸ்வரர், குலவிளக்கம்மன், வைராபாளையம் சோழீஸ்வரர், காஞ்சிகோவில் சீதேவியம்மன், நசியனூர் மதுர காளியம்மன், திருவாச்சி கரியபெருமாள், திண்டல் வேலாயுதசுவாமி கோவில், பெருந்துறை செல்லாண்டியம்மன், அம்மாபேட்டை சொக்கநாத சுவாமி கோவில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில்களில், சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, காளிங்கராயன் அணைக்கட்டு, காரணாம் பாளையம் அணைக்கட்டு, கொடிவேரி அணைக்கட்டு, பவானிசாகர் அணை மற்றும் காவிரி, பவானி ஆறுகளில் மக்கள் கூடவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.