* கடவுளை சரண் அடைவதே கல்வியின் பயன். * எந்த சூழலிலும் அடக்கமாக இருங்கள். * தவம், ஜபத்தால் அதிக பலன் கிடைக்கும். * முதலில் கடவுளுக்கு உணவை படையுங்கள். பிறகு நீங்கள் உண்ணுங்கள். * கடவுளின் திருநாமம் சொல்வோருக்கு குறையேதும் ஏற்படாது. * தர்மம் என்னும் படகில் பயணித்தால் வாழ்க்கை என்னும் கடலை கடக்கலாம். * வேதம் வகுத்த முறைப்படி கட்டுப்பாடுடன் வாழுங்கள். * தர்மம் உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார். * பயன் தரும் விஷயத்தை பேசுங்கள். * வேதத்தின் முடிவு உண்மை. உண்மையின் முடிவு அடக்கம். அடக்கத்தின் முடிவு மோட்சம். * நல்லவர் ஒருவரும் இல்லாத நிலையில் மழை பெய்வது நிற்கும். * பேராசை கொண்டவனுக்கு அறிவு வேலை செய்யாது. * கோபத்தை குறைத்தால் துன்பம் வராது. * ஒருவரின் பிறவிக்குணம் ஒருபோதும் மாறாது.