திருப்பூர்: திருப்பூர் கோயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடைபெற்ற வழிபாட்டில், திருப்பூர், புஷ்பா ரவுண்டான பத்திரகாளியம்மன் கோவிலில் குழந்தை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திருப்பூர், நெசவாளர் காலனி ராமலிங்க செளடேஸ்வரியம்மன் கோவிலில் சிங்க வாகன அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திருப்பூர், குமரானந்தபுரம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று ஆடி அமாவாசை, 11ம் தேதி ஆடிப் பூரம் வர உள்ளது. இவ்விரு நாட்களிலும், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதை தவிர்க்க, குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.