பதிவு செய்த நாள்
09
ஆக
2021
09:08
திருவண்ணாமலை: குழந்தை வரம் வேண்டி, பெண்கள் மண் சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில், பரதேசி ஆறுமுக சுவாமிகள், 185வது குருபூஜை விழா, ஆடி அமாவாசையான நேற்று நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இவ்விழாவில் மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டால், குழந்தை பிறப்பதாக நம்பிக்கை உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், நேற்று ஏராளமான பெண்கள் வந்தனர்.இங்கு நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்று, பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை சாதுக் கள் வழங்க, சேலை மடியில் பெற்று, குளக்கரையில் வைத்து, கைகளை பின்புறம் கட்டியவாறு மண்டியிட்டு, மண் சோறு சாப்பிட்டனர்.இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். கடந்தாண்டு குழந்தை பாக்கியம் பெற்ற வர்கள் பணம், தானியம் உள்ளிட்ட போன்ற பொருட் களை, நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.