பிருத்தியங்கிரா தேவி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2021 07:08
தேவகோட்டை: தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கு பட்டு குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி அம்பிகை கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. பத்தாயிரத்தெட்டு மூல மந்திர ஜெபம், ஆயிரத்தெட்டு ஆவர்த்தி ஹோமம், வெள்ளை குதிரைக்கு அசுவ பூஜை , வசோதரா ஹோமம், கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, நிகும்பல யாகம் உட்பட சிறப்பு யாக பூஜைகள் பிருத்தியங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்விக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். கோயில் நிறுவனர் கருப்பு குருக்கள் ஏற்பாடுகளை செய்து யாகங்களை வழி நடத்தினார். அசுவ பூஜையை முன்னிட்டு வெள்ளை குதிரை கொண்டு வரப்பட்டு அம்மன் சந்நிதியில் யாக குண்டம் முன் நிறுத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன.