Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஹிரண்ய கர்ப தான விதி
படலம் 84: ஹிரண்ய கர்ப தான விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
12:06

84வது படலத்தில் ஹிரண்ய கர்பதான விதி கூறப்படுகிறது. முதலில் எல்லா பொருளையும் கொடுக்க கூடியதான ஹிரண்ய கர்ப தானம் கூறப்படுகிறது என்பது பிரதிஞை. தங்கத்தினால் கீழ் மூடி மேல் மூடியுடன் கூடிய பேழை அமைக்கும் முறை கூறப்படுகிறது. அந்த பேழையை மரத்தினால் செய்து அதை தங்க தகட்டினால் கவர்ந்திருக்கும்படி செய்யவும் என கூறப்படுகிறது. அந்த பேழையில் முப்பத்திஆறு தத்வங்களை பூஜிக்கும் முறை, கூறப்படுகிறது. பிறகு துலாரோஹ முறைப்படி வேதிகையுடன் கூடிய இடத்தை மண்டலத்துடன் அமைத்து மத்தியில் நெல்லை பரப்பி அதற்கு மேல் புதிய வஸ்திரங்களால் போர்த்தப்பட்ட பேழையை வைத்து அதில் உளுந்து அளவில் துவாரம் செய்து அதில் பஞ்ச கவ்ய பஞ்சாமிருதங்களால் ஈசான மந்திரத்தை கூறி நிரப்பவும். பிறகு எவ்வாறு சிவமயம் ஏற்படுமோ அவ்வாறு காயத்திரியால் பூஜிக்கவும். பிறகு ஆசார்யன் சிவ மந்திரத்தை கூறி மூடவேண்டிய வஸ்திரத்தால் பேழையை மூடவும். பிறகு ஆசார்யன் 16 சம்ஸ்காரமான கர்பா தானம் முதலியவைகளை செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு தான விதி கூறப்படவில்லை. ஆனால் பிறகு சம்ஸ்காரங்களை செய்யவும் என்று அங்கு விசேஷம் கூறப்படுகிறது எனக்கூறி விசேஷமான முறை கூறப்படுகிறது. பிறகு ஸர்வ அலங்கார பூஷிதனாயும், மனைவியுடன் கூடியவனுமான கர்த்தாவை அழைத்து அவனுக்கே கர்பாதானம் முதலிய 16 சம்ஸ்காரங்களை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு சீமந்த கர்ம முறை கூறப்படுகிறது. பின்பு மனைவியின் அருகில் 30 நிஷ்க்க அளவுள்ள எல்லா அலங்காரத்துடன் கூடியதான கன்னிகையை வைத்து சிவன் முதலானவர்களுக்கு நிவேதிக்கவும். அன்ன பிராசன கர்மாவில் பிராம்மணர்களுக்கு போஜனம் செய்விக்கவும். ஹ்ருதயலேகா மந்திரம் உச்சரித்து எல்லா கர்மாவையும் முடிக்கவும். இங்கு சொல்லப்படாததை துலாபார முறைப்படி செய்யவும் என்று செயல்முறை விளக்கம் கூறப்படுகிறது. முடிவில் யார் இவ்வாறு செய்கிறானோ அவன் முடிவில்லாத பயனை அனுபவிக்கிறான் என கூறப்படுகின்றது. இவ்வாறு 84வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா விதமான கார்ய ஸித்தியை கொடுக்கக் கூடிய நிறைய தங்கதானத்தைப்பற்றி கூறுகிறேன். ஆயிரம் நிஷ்க அளவால் (பவுனால்) கீழ் பாத்திரம் (தங்கம் வைக்கக்கூடிய பாத்திரம்) செய்ய வேண்டும்.

2. மேலுள்ள பாத்திரம், அதன் பாதியிலோ அல்லது இரண்டாயிரம் நிஷ்க அளவாலோ அல்லது முக்கால் பங்கோ அல்லது அரை பங்கோ அல்லது ஒன்றே கால் பங்கோ ஒன்றரை பங்கோ,

3. இரண்டு பாகம் அதிகமாகவோ அல்லது முடிந்த வரையிலாவது மேல் பாத்ரம் (மூடி) அமைத்து அல்லது மரத்தினாலாவது அதை தங்கப்பட்டைகளால் (தகடு) சுற்ற வேண்டும்.

4. அதன் அடி பதினைந்து அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலமாக கூட்டி பத்தொன்பது அங்குலம் வரை அடி பாத்திரத்தின் விஸ்தாரம் கூறப்பட்டுள்ளது.

5. ஐம்பத்தொன்று அங்குலம் முதல் ஒவ்வோர் அங்குலமாக கூட்டி எழுபத்தைந்து மாத்ர அங்குலம் வரை பாத்திரத்தின் உயரம் கூறப்பட்டுள்ளது.

6. அகல, உயரத்தை பத்து பங்கின் ஓர்பாகம் செய்து ஒவ்வோர் அம்ச அதிகரிப்பால் பாதிக்கும் அதிகமாவுள்ள பரப்பளவால் முகத்தின் அகல அளவாகும்.

7. பிறகு பாதத்துடன் கூடியதாக்கி பாத்திரத்தின் பக்க அளவிலிருந்து வெளிக் கொணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று மாத்ரையிலிருந்து ஒன்பது மாத்ரை வரை வெளிப்படுத்தும் அளவு கூறப்பட்டுள்ளது.

8. பாத்திரத்தின் பாதம் பாத்திரத்தின் உயரம் எவ்வளவோ அவ்வளவு உயரமுள்ளதாகவோ அல்லது அதில் பாதியளவு உள்ளதாகவோ, முக்கால் அளவு உள்ளதாகவோ சமமாகவோ பலகையின் கனம் இருக்கலாம்.

9. பாதுகைக்கு மேல் நீளமோ, அகலமோ, கிண்ணத்தின் பக்கச்சுவருக்கு வெளியில் உள்ளதாக அமைக்கவும், பேழையின் வ்யாப்தியானது மாயாதத்வம் வரையிலுமோ, ப்ரக்ருதித்வம் வரையிலுமோ ஆகும்.

10. மேல்பாகம் சிவதத்வம் வரையிலும், மத்ய பாகம் புருஷதத்வம் வரையிலும் ஆகும், அதுபோலவே ஆசார்யன் தன்னையும் பாவித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹிரண்ய கர்பத்தின் விதி சொல்லப்படுகிறது.

11. மண்டபமானது வேதிகையுடனும் மண்டலத்துடனும் அமைத்து நடுவில் முன்போல் நெல் போட்டு

12. அதன்மேல் பேலாவை வைத்து புதிய வஸ்திரங்களால் அலங்கரித்து, இடைவெளி இல்லாமல் உளுந்தளவு த்வாரத்தில் பாலை (பேழையில்) நிரப்ப வேண்டும்.

13. அல்லது பஞ்ச கவ்யத்தாலோ பஞ்சாமிருதத்தாலோ அதை நிரப்பி ஈசானம் முதலிய பஞ்ச ப்ரம்ம மந்திரங்களால் அபிமந்திரணம் செய்ய வேண்டும். (நிரப்பவேண்டும்)

14. சிவகாயத்ரியாலும் பூஜித்து பிறகு சிவமயம் ஆகும்படியாக ஆசார்யன் பூஜிக்க வேண்டும். ஓ உயர்ந்த பிராம்மணர்களே, முன் சொன்னது போலவோ அல்லது சாமான்யமாகவோ பூஜிக்க வேண்டும்.

15. கர்த்தா கிழக்கு முகமாக உட்கார்ந்து கவுரீ காயத்ரியை ஜபிக்க வேண்டும். ஆசார்யன் சிவ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு கர்த்தாவை வஸ்த்திரத்தால் மூட வேண்டும்.

16. கர்பாதானம் முதலிய பதினாறு ஸம்ஸ்காரங்களையும் ஆசார்யன் செய்து வைக்க வேண்டும். பிறகு அதுபற்றி விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது.

17. எல்லா அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், மனைவியோடு கூடியவருமான கர்த்தாவை அழைத்து அவர் மனைவிக்கு கர்பதானம் முதலிய கிரியைகளை செய்ய வேண்டும்.

18. மனைவியின் வலது மூக்கில் அருகம்பில்லின் ரஸத்தையும் (சார்) இருபத்தொன்று அத்திப் பழங்களை பிழிந்து சாரையும் ஊற்ற வேண்டும். (பும்ஸவனம்)

19. தர்பைகளை கொண்டுவந்து தேவீ மந்திரத்தைச் சொல்லி ஸீமந்த கர்மாவை செய்ய வேண்டும். எல்லா அலங்காரங்களால் பிரகாசிக்கின்ற முப்பது நிஷ்க தங்கத்தால் செய்யப்பட்ட கன்யாபிரதிமையை

20. கர்த்தாவின் மனைவி பக்கத்தில் உட்கார வைத்து சிவனான ஆதிசைவரிடம் அர்ப்பணம் செய்ய வேண்டும். அன்னப்ராசனத்தின் பொழுது பாயஸத்துடன் பிராம்மஹணர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

21. ஹ்ருதய மந்திரம் உச்சரித்து எல்லா கர்மாவையும் செய்ய வேண்டும். இவ்வாறு இங்கு சொல்லப்பட்டது, சொல்லப்படாததை துலாரோஹணத்தில் சொன்னவாறு செய்ய வேண்டும்.

22. இவ்வாறு எவன் செய்கிறானோ அவன் எல்லா நன்மையையும் அடைகிறான்.

இவ்வாறு உத்திரகாமிக மஹாதந்திரத்தில் ஹிரண்ய கர்ப தான விதியாகிற எண்பத்தி நாலாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar