பதிவு செய்த நாள்
09
ஆக
2021
11:08
திருப்பூர்: தொற்று அதிகரித்து வருவதால், வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு தடைவிதித்துள்ளது.நேற்று ஆடி அமாவாசை. பிற அமாவாசைகளை விட சிறப்பு பெற்றது.
அம்மன் கோவில்களில் பக்தர் குவிவர். நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில், கொழுமம் உள்ளிட்ட நீர் நிலைகளை ஒட்டியுள்ள கோவில்களில் பக்தர் வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முன்னோர் வழிபாட்டை நீத்தார் கடன் என்று இலக்கியங்கள் பகர்கின்றன; பலரும் வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். அம்மன் கோவில்கள் சிறப்பு பூஜை இல்லாமல், அலங்காரம் மட்டும் செய்யப்பட்டிருந்தது. சிவன்மலைஆடி அமாவாசையை யொட்டி, சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை நடந்தது.சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள், அறநிலையத்துறை அலுவலர், பணியாளர் மட்டும் பங்கேற்றனர்.வழக்கமாக கூட்டம் நிரம்பி வழியும் சிவன்மலை நேற்று பக்தர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. வெள்ளகோவில்வெள்ளகோவில் பகுதியில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தபோதிலும், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஓலப்பாளையம், முருங்ககாட்டு வலசு தம்பிக்கலையசாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.