நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும் பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும் நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்தும் வருவர். இந்த துன்பங்களிலிருந்து மீளவும் நல்ல பலன்களைப் பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம். அதனால் நாக பஞ்சமி நாகசதுர்த்தி அன்றோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ நாக சிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள் - குங்குமம் வைத்து பூஜை செய்வதன் மூலம் நாக தோஷம் நீங்கும். மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால், நாக தோஷம் (அ) காலசர்ப்ப தோஷம் எதுவானாலும் அவை நீங்கி உன்னதமான வாழ்க்கை அமையும்.