பதிவு செய்த நாள்
14
ஆக
2021
03:08
பெ.நா.பாளையம்: ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பழமைவாய்ந்த வீரமாஸ்தி அம்மன் கோயிலில், ஆடி வெள்ளியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், அம்மன் எழுந்தருளினார். பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் உள்ள வி.கே.வி., நகர் குடியிருப்பு பகுதியில், செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல, நரசிம்மநாயக்கன்பாளையம் காமாட்சி அம்மன், சக்தி மாரியம்மன், அப்புலுபாளையம் மாகாளியம்மன், காமராஜ் நகர் ராஜராஜேஸ்வரி அம்மன், ஜோதிபுரம் தண்டுமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.