பட்டிவீரன்பட்டி: ஜோதி லிங்கேஸ்வரர் கோயில் நாகேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்கள் நடந்தன. 51 வகை சாதம் சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன், காளியம்மன், மாரியம்மன், விசாலாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருநகர், கீழகோவில்பட்டியில் கூழ் ஊற்றி வழிபாடு நடத்தினர்.
நிலக்கோட்டை: துர்க்கை அம்மன், மாரியம்மன், பெரிய காளியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வழிபாடு நடந்தது. கூழ் ஊற்றி அன்னதானம் வழங்கினர்.