திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2021 01:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜை நடந்தது. சண்முகர் சன்னதியில் உள்ள மூலவர்கள் சக்தி விநாயகர், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை முடிந்து அபிஷேகம் நடந்தது. கோயில் ஓதுவாரால் ஏழாம் திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.வழக்கமாக குருபூஜை முடிந்து உற்ஸவர் சுந்தரர்
பல்லக்கில் கொடி கம்பம், நந்தியை மூன்றுமுறை வலம் சென்று, உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதி செல்வார். பக்தர்களுக்கு 5 வகை அன்னதானம் வழங்கப்படும். கொரோனா தடை உத்தரவால் அவை ரத்து செய்யப்பட்டன.