ராமேஸ்வரம் : 15 நாட்களுக்கு பின் நாளை (ஆக., 16) முதல் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளது.கொரோனா பரவல், ஆடி அமாவாசை, ஆடித் திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்ஆக., 1 முதல் பக்தர்கள்தரிசனத்திற்கு தடை விதித்தனர்.அரசு தடை உத்தரவு இன்றுடன் முடிவதால் நாளை முதல் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள்தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.