ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உற்ஸவம் புஷ்பயாகத்துடன் நிறைவு பெற்றது.ஆகஸ்ட் 3 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவில் 11ம் தேதி தங்க தேரோட்டம் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். பல்வேறு மலர்களால் பூக்கோலம் இடப்பட்டு புஷ்பயாக பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பக்தர்கள் அனுமதிக்கவில்லை.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.