* ஒழுக்கமும், கல்வியும் தந்தையின் அன்பளிப்பாகும். * வாழ்க்கைத்துணையுடன் நல்ல வாழ்க்கை வாழுங்கள். * தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது. * நல்ல குணம் உள்ளவரே சிறந்தவர். * நிதானம் இறைவனின் தன்மையாகும். அவசரம் சைத்தானின் தன்மை. * லஞ்சம் வாங்காதீர். லஞ்சம் கொடுக்காதீர். * பசித்தவனுக்கு உணவளிப்பது சிறந்த தர்மம். * பணியாளர்கள் மீது கருணை காட்டுங்கள். * பிறருக்கு தீங்கு செய்யாதீர். * விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் கர்வம் வேண்டாம். வீண் செலவு வேண்டாம். * இனிமையான பேச்சும் தர்மமாகும். * நல்ல குணம் நம்பிக்கைக்குரிய அடையாளம். தீயகுணம் நயவஞ்சகத்தின் அடையாளம். * நாவை அடக்கினால் நன்மை கிடைக்கும். * செல்வந்தர் செய்யும் தர்மத்தை விட, ஏழையானவர் செய்யும் தர்மமே மேலானது. * உதவியை முதலில் குடும்பத்திற்கும், பிறகு சமூகத்திற்கும் செய். * இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்.