ராமேஸ்வரம் : 75வது சுதந்திரதினத்தை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மக்களுக்கு பார்சலில் உணவு வழங்கி சமபந்தி நடந்தது.
ராமேஸ்வரம் கோயிலில்சுவாமி, அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. பின் அனைத்து தரப்பு மக்களுக்கு கோயில் வளாகத்தில் உணவு பரிமாறி சமபந்தி நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா பரவலை தடுக்க வேண்டி நேற்று சேலை, வேட்டிகள் மற்றும் உணவு, இனிப்பை பார்சல் செய்து சமூக விலகலுடன் மக்களுக்கு வழங்கினர்.கோயில் இணை ஆணையர் பழனிக்குமார், ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், கோயில் பேஸ்கார் கமலநாதன், தி.மு.க., நகர் செயலர் நாசர்கான், பா.ஜ., நகர் தலைவர் ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.