திருச்செந்தூர்:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 29ம் தேதியன்று ஆனி வருஷாபிஷேகம் நடக்கிறது.திருச்செந்தூரில் வருஷாபிஷேக விழா இம்மாதம் 29ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் விமான தளத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை, சண்முகர், வெங்கடாஜலபதி உட்பட்ட தெய்வங்களுக்கு விமான அபிஷேகம் நடக்கிறது. இரவில் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.