இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களின் அர்ச்சகர்கள் , பட்டாச்சாரியார்களுடன் அமைச்சர் சேக்ரபாபு ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவ ர்கள் கூறியதாவது : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதம் அடைந்த மண்டபம் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக பணியை விரைவுபடுத்த வேண்டும். ரோப்கார் சீக்கிரம் வர ஏற்பாடு செய்ய வேண்டும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில்,பக்தர்களுக்காக பேட்டரி கார் இயக்க வேண்டும்; 22 தீர்த்தங்களை வரன்முறைப்படுத்த வேண்டும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் , சுவாமி நகைகள் சீரமைக்க வேண்டும். 9 தீர்த்தங்களில் பக்தர்களுக்கு வசதி செய்ய வேண்டும். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ராமேஸ்வரத்தில் உள்ளது போல, 26 தீர்த்தங்கள் இருந்தன; காலப்போக்கில் அது மாயமாகி விட்டன. அவற்றுக்கு புத்துயிர் பெற செய்ய வேண்டும் என, அர்ச்சகர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை ஏற்ற பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு , 500க்கும் மேற்பட்ட கோயில்களில் வரைவு திட்டம் தயாரித்து அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளதாக கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உதவி அர்ச்சகர்கள் பட்டியல் தந்தால் , பணி நிரந்தரம் குறித்து அரசு ஆலோசிக்கும் என்றார்.