ராமர் கோயில் கட்டுமானம் துவங்கவில்லை: பக்தர்கள் கவலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2021 02:08
எஸ்.பி.பட்டினம் : தொண்டி அருகே ராமர் கோயில் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும் பணிகள் துவங்காததால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
தொண்டி அருகே இடையன்வயலில் பழங் காலத்தில் கட்டபட்ட ராமர் கோயில் உள்ளது. இங்கு ராமர் பாதம், கருடாழ்வர், விநாயகர் சிலைகள் உள்ளன. இக்கோயிலை புதிதாக கட்ட சுற்றுலாத்துறை சார்பில் ரூ.2 கோடியே 60 லட்சம் ஒதுக்கபட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் கட்டுமான பணிகள் துவங்கவில்லை. புல்லக்கடம்பன் ஊராட்சி தலைவர் மாதவி கூறியதாவது: மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இக் கோயிலை புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். சுற்றுலாத்துறை சார்பில் புதிய கோயில் கட்டப்படும் என கடந்தாண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும் பணிகள் துவங்கவில்லை. கிடப்பில் போடப்பட்ட இக் கோயில் கட்டும் திட்டத்தை உடனடியாக துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.