மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.பவுஞ்சிப்பட்டில் உள்ள மலை வாழ் மக்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கன்னிமார் கோவிலில் உள்ள சுவாமிக்கு பூஜை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பூஜை நடத்தவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, மதியம் கோவில் அருகே உள்ள குளத்தில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. பின் ஊரணி பொங்கலிட்டு சுவாமிக்கு பூஜை செய்தனர்.மலை வாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி ஆடல் பாடலுடன் வழிபட்டனர். பூஜையில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.