ஆக., 22 வரை ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2021 09:08
ராமேஸ்வரம்: கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் ஆக., 22 வரை ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஆடித் திருவிழாவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க அனைத்து இந்து கோயிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து, பின் அனுமதித்தனர். இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமையில் பக்தர்கள் வழிபாடு செய்வதை தவிர்க்க அனைத்து வழிபாட்டு தலங்களும் பக்தர்கள் தரிசிக்க தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று முதல் ஆக., 22 வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லை. ஆக., 23 முதல் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. எனவே பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.