Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஓணம்.. திருவோணத் திருநாளும் ... திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வரலட்சுமி பூஜை திருப்புத்துார் நின்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் திருவோண பூஜை: பக்தர்களுக்கு பாயசத்துடன் ஓணம் விருந்து
எழுத்தின் அளவு:
சபரிமலையில் திருவோண பூஜை: பக்தர்களுக்கு பாயசத்துடன் ஓணம் விருந்து

பதிவு செய்த நாள்

21 ஆக
2021
08:08

நாகர்கோவில் : கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுறுத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது.

ஆவணி மாதம் அஸ்தம் நாளில் ஓணம் கொண்டாட்டம் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு ஆடி அஸ்தத்தில் துவங்கி, இன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மூன்றடி நிலம் தருவதாக விஷ்ணு பகவானுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றுவதற்காக, தன் தலையை கொடுத்து மண்ணுக்குள் அமிழ்ந்து போன மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தினசரி 22 ஆயிரத்தை தாண்டி வரும் நிலையிலும், அரசு தளர்வுகளை அளித்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கட்டுப்பாடுகள் இருந்தாலும் மக்கள் அதை எல்லாம் மறந்து பண்டிகையை கொண்டாடுகின்றனர். கடைகளிலும், தெருக்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மலர்களால் அமைக்கப்படும் அத்தப்பூக்களம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இதற்காக நேற்று தோவாளை மலர் சந்தையில் இருந்து, ஏராளமான மலர்கள் கேரளாவுக்கு ஏற்றுமதியாகின. இதனால், பூ விலை நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிகமானது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் களைகட்டியுள்ளது. இங்கு, இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அய்யப்பன் விக்ரகத்தில் மஞ்சள் துண்டு அணிவிக்கப்பட்டு, இன்று திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய ஓணம் விருந்து அளிக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar