மண்ணில் நான்கு விதமானவர்கள் இருக்கிறார்கள். பிறரையும் துன்புறுத்தி தானும் துன்பப்பட்டு கிடப்பவன் அதமா அதமன். பிறரைக் கெடுத்து தான் மட்டும் வாழ்பவன் அதமன். பிறரையும் வாழ வைத்து தானும் வாழ்பவன் மத்திமன். தன்னைக் கெடுத்து பிறரை வாழ வைப்பவன் உத்தமன்.இந்த நான்கில் உத்தமன் என்னும் பிரிவைச் சேர்ந்தவர் வாமனர். ஆனால் மகாபலியிடம் மூன்றடி யாசகம் கேட்டது இழிவான செயல் என்றாலும், தனக்காக இல்லாமல் உலக நன்மைக்காக யாசகம் கேட்டார். உலகிற்கே படியளக்கும் மகாலட்சுமியை மார்பில் தாங்கி நிற்பதால் யாரிடமும் அவர் யாசிக்கத் தேவையில்லை என்றாலும் கைநீட்டி யாசகம் கேட்டார்.