கன்னிவாடி:கீழத்திப்பம்பட்டியில், மதுர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், நவக்கிரக, தனாஹர்ஷனா வேள்விகள், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, கோ பூஜைகள் நடத்தப்பட்டது. இரண்டாம் கால யாகம், திரவிய, ஜயாதி ஹோமங்களுடன், கும்பங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது