* தினமும் கடவுளை வணங்குங்கள். * உழைக்கும் மனம் இருந்தால் வளமுடன் வாழலாம். * கோபம் வரும்போது கண்ணாடியை பாருங்கள். கோபம் பறந்தோடும். * தர்மவழியில் சம்பாதித்த பணம் பல தலைமுறைக்கு உதவும். * உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. * பெரியவருக்கான அடையாளம் பிறரை குறை சொல்லாமல் இருப்பதே. * மண்ணின் தன்மையை பொருத்து மழைநீர் மாறும். அதுபோல் நண்பரின் தன்மை பொருத்து ஒருவரின் குணம் மாறும். * அனைவரிடமும் ஒரே மாதிரி பழகுங்கள். * பணிவுதான் வெற்றியை தரும். * மகிழ்ச்சி, கவலை அவரவர் மனதை பொறுத்தது. * தன்னை வணங்காதவர்கள் மீது கடவுள் கோபப்படமாட்டார். * பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்க கூட்டுப்பிரார்த்தனை செய்யுங்கள். * கடவுள் நமக்கு கொடுத்ததை ஏற்றுக்கொள்ளுங்கள்.