விழுப்புரம்: வளவனுார் அடுத்த காராமணிக்குப்பம் தெருவில் உள்ள ராகவேந்திரர் சுவாமி கோவிலில், 350ம் ஆண்டு ஆராதனைவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாத சேவை , காலை 6:00 மணிக்கு கோபூஜை , விஸ்வரூப பாராயணம், 7:00 மணிக்கு சங்கல்பம் ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு மகா அபிேஷகம், 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தனக்காப்பு, ராகவேந்திரா பக்தி பஜனை சபாசார்பில் சிறப்பு பஜனை , இரவு 7:00 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சங்கரலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.