புதுச்சேரி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரியில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. பகவான் கிருஷ்ணர் பிறந்த தினத்தை ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நாள், ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை வாசல் படியிலிருந்து பூஜை அறைவரை வரைந்து, கிருஷ்ணரை அழைத்து பூஜை செய்வர். கிருஷ்ணர் உருவபொம்மை , சிலை வைத்து வழிபடுவர். வரும் 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரியில் கிருஷ்ணர் பொம்மை விற்பனை களைகட்டத்துவங்கி உள்ளது. காமராஜர் சாலை , பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கிருஷ்ணர் சிலைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.