காளஹஸ்தி: ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்பவர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் அதிகாரி பெத்தி.ராஜு முன்னிலையில் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பணமாக ஒரு கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 321 ரூபாய் ரொக்கப் பணமாகவும், தங்கம் 126 கிராம் ,வெள்ளி 455.900 கிராம் மற்றும் 36 வெளிநாட்டு டாலர்கள் இருந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.