திருநெல்வேலி: கங்கைகொண்டான் ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் கோடகநல்லுார் சுந்தர சுவாமிகள் விக்ரகத்திற்கு இன்று (26ம் தி) காலை சிறப்பு வழிபாடு நடக்கிறது. கங்கைகொண்டானில் அவதரித்த சுந்தர சுவாமிகள், கோடகநல்லுாரில் வாழ்ந்ததால், பக்தர்கள் அவரை கோடகநல்லுார் சுந்தர சுவாமிகள் என அழைத்தனர். சுவாமிகள் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதரின் தீவிர பக்தராக திகழ்ந்தார். கங்கைகொண்டான் மேலத்தெருவில் வீடு வாங்கிய கோவிந்தராஜூ நாயுடு, புதிதாக வீடு கட்ட தரையை தோண்டிய போது குடம் ஒன்றை கண்டெடுத்தார். அந்த குடம் குறித்து காஞ்சி பெரியவரிடம் விளக்கம் கேட்டார். அப்போது அவர், அந்த குடத்தில் உள்ள கங்கை நீரை சுந்தர சுவாமிகள் அடுத்த கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்துவதற்காக தனது வீட்டில் த்து பூஜித்ததாக தெரிவித்தார். கடந்த 2017ம் ஆண்டு சிருங்கேரிசங்கராச்சாரியார் அந்த குடத்திலிருந்த தண்ணீரால் கங்கை கொண்டான் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை செய்து வைத்தார். சுவாமியின் பதர்கள் அவரது மாதாந்திர ஜன்ம நட்சத்திரத்தில் அபிஷேக, ஆராதனைகள் செய்ய கோடகநல்லுார் கோயிலுக்கு ஐம்பொன் விக்ரகத்தை வழங்கவுள்ளனர். கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் கோயிலில் இன்று (26ம் தி) மாலை 5 ணி முதல் இரவு 7 ணி வரை சுவாமிகள் விக்ரகத்திற்குசிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.