ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புது பள்ளியறை பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2021 09:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாணம் முடிந்த நிலையில், நேற்று சுவாமி, அம்மனுக்கு புது பள்ளியறை பூஜை, மகா தீபாரதனை நடந்தது.
ராமேஸ்வரம் கோயிலில் ஆக., 1 ல் ஆடித்திருக்கல்யாணம் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆக.,12ல் ஆடித்திருக்கல்யாணம் நடந்தது. நேற்று புது பள்ளியறை பூஜையையொட்டி அம்மன் சன்னதி அருகில் உள்ள பள்ளியறையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அம்மன் எழுந்தருளினார். சன்னதியில் இருந்து வெள்ளி பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி பள்ளியறையில் எழுந்தருளினார். பின் சுவாமி, அம்மனுக்கு பூஜை, மகா தீபாரதனை நடத்தப்பட்டது. ஏராளமான புதுமண தம்பதிகள், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.