கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2021 02:08
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலை சுற்றுலாத்தலமாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சோழ மன்னர்கள் காலத்தில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் கற்றளி கோயில் கள் உருவாக்கப்பட்டன. தங்கள் எல்லைக ளை வரையறுக்கவும்,ஆன்மிகத்தை வள ர்க்கவும் நதிகளின் கரையோரம் இது போ ல் கோயில்கள் மன்னர்களால் அமைக்கப் பட்டன. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் பல கோயில்கள் நல்ல நிலை யில் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கதாக கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள் ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சிற்ப க்கலை மற்றும் கட்டடக் கலையின் சிறப் புகளை உணர்த்துவதோடு, அன்றைய வாழ்க்கை முறை குறித்தும் மன்னர்கள் வழங்கிய மானியங்கள், கோவில் நடை முறைகள் குறித்தும் கல்வெட்டுகள் இந் தக் கோவிலில் உள்ளன. இரண்டு கி.மீ., தொலைவிலுள்ள கொங்கணேஸ்வரர் கோவிலை இணைக்கும் சுரங்கவழிப் பாதை இந்த கோவிலின் வரலாற்று சிறப் புகளில் ஒன்றாகும். இந்தக் கோவிலை சுற்றுலாத்தலமாக வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற வரலாற்று சிறப்புமி க்க கோவில்களை சுற்றுலாத் தலங்களா க மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மே ற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாக கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவி லையும் ஆன்மிக சுற்றுலா தளமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக மாவட்ட சுற்றுலா வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பிரசாந்த், மணிமுத்து, மற்றும் கோவில் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் இந்த கோயிலை ஆய்வு செய்தனர்.